திங்கள், 3 பிப்ரவரி, 2025

சுவாச காச நிவாரண சூரணம்

சுவாச காச நிவாரண சூரணம் தாளிசபத்திரி சீரகம் சுக்கு மிளகு சித்திரத்தை சிறுநாகப்பூ கிராம்பு லவங்க பட்டை ஓமம் கருஞ்சீரகம் தான்றிக்காய் பெருநாகப்பூ கடுக்காய் ஏலக்காய் ஜாதிக்காய் சுத்தம் செய்து பாலில் ஒரு ஆவிகாட்டி சுக்கு சித்தனத்தையை மேல்தோல் சீவியும் கிராம்பை மேலே உள்ள பூவை நீக்கியும் கடுக்காய் தான்றிகாய்களை கொட்டை நீக்கியும் மற்றவைகளை மித தீயில் இளவறுப்பாக வறுத்து எல்லா சரக்குகளையும் மிக நுண்ணிய பொடி சூரணமாக செய்து கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்து கொண்டு தேனில் குழைத்து ஒருவேளை கொடுக்கவும் அதிக கபம் இருந்தால் இதோடு ஒருதுளி பச்சை கற்பூரம் பனங்கருப்பட்டி கலந்தும் தரலாம் இதுசமயம் வெட்டிவேரை கஷாயம் இட்டு பனங்கருப்பட்டி இட்டு கொடுப்பது அதிக சூடு இல்லாமல் கடும் இருமல் இல்லாமல் இருக்கும் இதனை சிறிது சுடுசாதத்தில் பிசைந்து சிறிதளவு நெய் கலந்து கொடுக்கலாம் இது வரட்டு இருமலுக்கு இவ்விதம் பயன் படும் [04/02, 5:15 am] Thamaraiselvan Ramaiya: இதில் எல்லா சரக்குகளும் சமன் எடை நிதானமாக முருகனை வேண்டி இச்சரக்குகளை ஒரு தவமாக கையாள வேண்டும் மருந்துகளை தயார் செய்யும் போது பலரை கூட வைத்து கொள்ளகூடாது பெயர் சொல்லா மருந்து என்று இதற்கு பேர் உண்டு மருந்தே கடவுள் அதாவது உடலுக்குள் கடந்து சென்று காப்பாற்றுவது ஆக மருந்தை கடவுளுக்கு தரும் மரியாதை அனைத்தும் தரவேண்டும். விளையாட்டு தனமாக மதிப்பு தெரியாத மக்களுக்கு வலிய சென்று மருந்தை தரகூடாது. மருந்தை பிணியாளருக்கு கொடுப்பதோடு அதன் செயல் அறிகுறியை கவணித்து பிணி விலகிய பின் படிப்படியாக மருந்தை கொடுக்க வேண்டும் மருந்தை மதியாதவர்க்கு கண்ணிலும் காட்ட கூடாது கபம் குழந்தைகளுக்கு மிக பெரிய இடையூறு செய்வன உடலில் தேக வனப்பை கெடுக்கும் இந்த கபம் சளி சளி தொற்று அடிக்கடி வரும் குழந்தைகளை நெடும்நாள் பயன்படுத்தும் மெத்தை தலையணைகளை பயன்படுத்திடாமல் பார்த்து கொள்ள வேண்டும் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து உணவை சூடு செய்து தரகூடாது பனி காலத்தில் முக்கியமாக அதிக தூரம் பயணிக்க வைக்க கூடாது கொதித்து ஆறியபின் வெள்ளை பருத்தி துணியில் வடிகட்டிய நீரை தாராளமாக கொடுக்கலாம் அடிக்கடி பூண்டு மிளகு ரசம் கொடுக்கலாம் விளையாட்டாக பலூன் ஊத வைக்கலாம் சிறு நடை சிறு ஓட்டம் நுரையீரல் நன்கு சுவாசம் செய்ய வைக்கலாம் பந்துகள் விளையாட்டு நல்லது வாலிபால் பூப்பந்து ஆடுதல் # இதில் கருஞ்சீரகம் இருப்பதால் கர்ப்பம் தரித்த பெண்கள் சாப்பிட கூடாது ######## பொருப்பு துறப்பு##### இதுஒரு பாரம்பரிய கைபாக முறை இதை தேர்ந்த வைத்தியர் மேற்பார்வையில் செய்து கொள்வது உசிதம் நாட்டுப்புற மரபு பகிர்வு.... நன்றி சித்தர் தொல்குடி மக்களுக்கு கந்தாசரணம் சுபம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விவசாய குடியின் இயற்கை பழமொழிகள்

    நன்னிலம் கொழுஞ்சி, நடுநிலம் கரந்தை, கடைநிலம் எருக்கு. நல்ல நிலத்தில் கொழுஞ்சி விளையும். நடுத்தர வளமான நிலத்தில் கரந்தை விளையும். தரமற்ற ...