சனி, 1 பிப்ரவரி, 2025

முந்திரி பயன்பாடுகள்

தன்வந்தரி அருள் ஆயுர்வேத விதி முந்திரிக்கை எனும் வித்து இந்தின் இளம்பிறை போன்றதும் தந்தி முகத்தவன் தந்தத்தை ஒத்ததும் உக்கிர தெய்வங்களின் கோர பற்களை ஒத்து வலம் இடம் ஓரளவாய் வளைந்த குணமுடைய முந்திரி சத்து ஊட்டம் நிறைந்த வித்ததாம் வெப்ப மண்டல வனபயிராம் வித்தின் குணமது உரைக்க மதுரம் குணமுடைய மித இனிப்பு சுவை கொண்டது. சீதளமெனும் குளிர்ச்சி குணம் ஒத்த முந்திரி விருஷ்யம் குணம் நினைவு ஆற்றலை மேம்படுத்தும் அஸ்தி பலம் ஓங்குவிக்கும். தேகவலிமை தரும். தேகவனப்பு பொலி வாக்கும் சருமம் மிளிரும் முடி கருக்கும் நினைவு மேம்படும் நல்லதொரு நெய் நிணம் நிறைந்த சத்துளது முந்திரி பயனே ஆயுர் வேதத்தின் முக்குண செயல்களில் இயற்கை முந்திரியில் ரவி உலர்வில் உள்ளதில் வாதம் சமநிலை பித்தம் சமநிலை கபத்தை ஊட்டமளிக்கும் குணமதால் கபம் ஒங்கும் கபகுணமொத்தோர்க்கு முந்திரியில் கபம் சமனம் சாந்தி செய்து உண்ணவேண்டும் முந்திரி நெய்யுடன் வறுக்கப்பட்டாலும் நெய் பரியந்தமாகி கபகுணம் ஊட்டமாகும் உப்பிட்டு வறுத்தெடுக்க வாதம் சமமாகும் பித்தம் ஊட்டமளிக்கும் கபம் ஊட்டமளிக்கும் எண்ணெய் உப்பு சேர்த்து வறுத்தெடுக்க வாதம் சமமாகும் பித்தம் ஊட்டமளிக்கும் கபம் அதிகரிக்கும் வெண்ணெய் உடன் சேர்க்கும் போது வாதம் சமமாகும் பித்தம் ஊட்டமளிக்கும் கபம் அதிகரிக்கும் முந்திரி பருப்பு நல் கொழுப்பு புரதம் நார்சத்து நிறைந்த ஆற்றலால் சடுதி செரிமான சிக்கலால் நேரடியாக உலர்நிலை வித்தாய் உண்பது குடல் அழற்சி மற்றும் செரிமான நீட்சிக்கு காரணியாய் இருப்பதால் ஏதேனும் ஊற வைத்து உண்ணுதல் செரிமான நிலைக்கு எளிதாகும் முந்திரி கபம் குணம் விலக பொறித்த முந்திரியில் மிளகு அல்லது திரிகடுகம் சிறிது சேர்க்க கபகுணம் சமமாகும் ஊற வைப்பது அதன் கடின செரிமானத்தை எளிதாக்கும் பாலில் வேகவைத்துன்பது அரிசி பருப்பு மிளகு சீரகம் நெய் அளவில் பொங்கலில் சேர்த்து சமைத்துண்பது நளபாக முறையாம் முந்திரி பூவூறல் எனும் குல்கந்து மாதுளை சாறு கலந்து உண்ணுவது குருதி சோகைக்கு கை கண்ட பலனாகும் பூவிலிருக்கும் ஓர் மதுரதிரவத்தையும் ( நெக்டார்) மகரந்தம் உடனாய தன்னில் சுரக்கும் சுப காடி நொதியம்(என்சைம்) சேர்ந்த கலவை தேனீ சேர்க்கும் தேன் ஆக சிறந்த மதுரமும் நொதியம் சேர்ந்த கலவை தேன் முந்திரி பருப்பு சுட்டெடுத்ததை தேனில் ஊறவைத்து பின்னர் அதனை அரைத்த விழுதுகளை தேனுடன் உண்பது சிறந்த கலவை பூவூறல் எனும் குல்கந்து தேன் சுட்ட முந்திரி கூட்டி ஊறல் செய்து உண்பது தாது பலம் பெருமாம் பச்சை முந்திரி பாலில் பிட்டவியலாக அவித்து அரைத்து நெய்யுடன் சேர்த்து நீர் பாகம் தீர காய்ச்சிய கிருதமும் மழலை இளஞ்சேய்களின் நினைவாற்றல் மற்றும் தேக தேற்றம் தரும் [க்ஷ சக்கரை பிற்கால நொதியம் ஆனதால் நீர்ம சர்க்கரையில் நொதியம் செய்து கொள்ள தற்கால அவுஷத முறை இளகங்களுக்கு அனுமதிக்கிறது முந்திரியை சில நோயுடையோர் நீக்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் அதிக நிண கொழுப்பு எடையுள்ளவர்கள் முந்திரி எண்ணெய் கூட்டி வறுத்து உண்பது தவிர்க்க வேண்டும் செம்பு சத்து உள்ளதால் கல்லீரல் மஞ்சள் காமாலை தாக்குதல் நேரம் முந்திரி தவிர்க்க வேண்டும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக கல் ஒவ்வாமை செரியாமை கபம் பாதித்தவர்கள் நுரையீரல் அழற்சி உள்ளவர்களும் பச்சையாகவோ தனி உணவாக அதிகம் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும் புற்றுநோய் உள்ளவர்களுக்கு மிகவும் வலு தரும் முந்திரி நோயின் வீரியம் பரவாமல் தசைகளில் பரவி ஒரு நெய் குணம் தசைக்கு தந்து பாதுகாக்கும் ஒரு பயன் தரும் வித்து தசைகள் போஷாக்கு அடையவும் இறுக்கம் தளர்வு தருவதும் எலும்பு பல் போன்ற வெண்தாது சுக்ல பெருக்கத்திற்கும் ஆரோக்கியமான மூளை தூய எண்ண உற்பத்திக்கு மதிஎனும் சந்திர சோம குணம் கொண்டது முந்திரி இந்தின் குணம் சீதளம் இந்தின் உடல் குணம் கபம் இந்தின் குணம் சுக்கிலம் இந்தின் குணம் இளமை மற்றும் தேக பளப்பபு இரவில் பச்சை முந்திரி சாப்பிட கூடாது அதுவும் கபம் கூறு உடையோர் முந்திரி பருப்பு இரவில் பயன்படுத்த தவிர்க்க வேண்டும் காலை மாலை மதியம் என பகலில் மட்டும் முந்திரி பருப்பு நேரடியாக உண்பது நல்லது. சூடான பால் வெந்நீர் அருந்துவது சமப்படுமாம் 1 அவுன்ஸ் மூல முந்திரி (28.35 கிராம்) இவ்வித தாதுக்களை கொண்டுள்ளது: 157 கலோரிகள் 8.56 கிராம் (கிராம்) கார்போஹைட்ரேட் 1.68 கிராம் சர்க்கரை 0.9 கிராம் நார்ச்சத்து 5.17 கிராம் புரதம் மொத்த கொழுப்பு 12.43 கிராம் 10 மில்லிகிராம்கள் (மிகி) கால்சியம் இரும்புச்சத்து 1.89 மி.கி மெக்னீசியம் 83 மி.கி பாஸ்பரஸ் 168 மி.கி பொட்டாசியம் 187 மி.கி சோடியம் 3 மி.கி துத்தநாகம் 1.64 மி.கி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமூலர் சூனிய சம்பாஷணை

பூசணி பூவும் மஞ்சள் வர்ணம் ஒரு ஞானம் விழிப்புணர்வு திருமந்திரம்.2868. ”வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்...